குடும்ப ஓய்வூதியர்களின்கவனத்திற்கு
குடும்ப ஓய்வூதியர்களின்கவனத்திற்கு
தமிழ்நாடு அரசு அரசாணை எண் 42 நிதித்( ஓய்வூதியம் )
துறை நாள் 7..2.. 2011
இன்படி
குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கும்
80 வயது முடிந்தவுடன் 81 வயது ஆரம்பித்த நாளிலிருந்து 84 வயது முடியும் வரை
அவர்கள் பெற்று வரும் அடிப்படை குடும்ப ஓய்வூதியத்துடன்
கூடுதலாக 20 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
85 வயது அடைந்தவர்களுக்கு
89 வயது முடியும் வரை 30 சதவீதம்
கூடுதலாக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
80 வயது முடிவடைந்து 81 ஆம் வயது அடைந்துவிட்டவர்கள்
மட்டும்,
ஒரு விண்ணப்பம் எழுதி உரிய கருவூல அலுவலருக்கு
1. ஓய்வூதிய கொடுப்பாணையின்
புகைப்பட நகல்.
2. வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின்
முதல் உள்பக்க புகைப்பட நகல்,
3. ஆதார் அட்டை புகைப்பட நகல்
ஆகியவைகளை ஒன்றாக இணைத்து விண்ணப்பத்தை பதிவுத் தபால் ஒப்புதல் அட்டையுடன் அனுப்ப வேண்டும்.
கருவூலத்தில் நேரில் கொண்டு போய் கொடுக்கக் கூடாது.
வயதான, இயலாத குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு தெரியப்படுத்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
காரணம் இந்த விவரம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
Comments
Post a Comment