அரசுப் பணிக்கு Computer Office Automation (COA) கட்டாயம்



*அரசுப் பணிக்கு Computer Office Automation  (COA) கட்டாயமா ?*

இது குறித்து பலர் கேள்விகளை துளைத்து எடுக்கின்றனர். எனக்கு தெரிந்த தகவல்களை கூறுகிறேன்.

அறிவியல் வளர்ச்சியில் தட்டச்சு இயந்திரங்கள் கிட்டத்தட்ட அருங்காட்சியகங்களுக்கு அனுப்ப வேண்டிய காலத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்த தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு ஓர் அரசாணையை பிறப்பித்தது. அதில் தமிழ்நாடு அமைச்சு பணிகளின் கீழ் வரும் Typist/Steno Typist பதவிகளுக்கு மட்டும் ஏன் Computer Office Automation ஐ ஓர் தகுதியாக கொண்டு வர கூடாது என்று முன் மொழிந்தது..

மேலும்  அது முன் தகுதி அல்ல (Not a Pre-Requisite Qualification) எனவும்  அரசுப் பணியில் சேர்ந்த பிறகு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (DOTE) நடத்தும் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே Probation எனப்படும் தகுதி காண் பருவம் முடிந்து பணி ஒழுங்கு செய்யப்படுவார்கள் என அதில் தெரிவிக்க பட்டு இருந்தது.

மேலும் கணினி அறிவியல் (Computer Science) கணினி பொறியியல் (Computer Engineering) .BCA,MCA,IT,Computer Design அல்லது கணினி சம்பத்தப்பட்ட படிப்புகள் படித்தவர்கள் அதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என 2017 ஆம் ஆண்டு இன்னொரு திருத்த ஆணை மூலம் தெரிவித்தது..

இப்ப தேர்வர்களுக்கு இருக்கிறது என்ன குழப்பம் ??? கட்டயாமா முன்னாடியே படிச்சு இருக்கணுமோ ? 
அதுவும் எல்லா Post க்கும் Group 1 to Group VIII வரை ?? .

1. தேர்வர்களுக்கு COA வை ஏன் தகுதியாக வைக்க கூடாது என்று TNPSC தான் அரசிடம் கருத்து கேட்டுள்ளது

2. இது குறித்து அனைத்து துறை அரசு செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்படும். அது நிராகரிக்கப்படலாம் அல்லது கட்டயாம் ஆக்க படலாம்..

ஆனால் எல்லா பதவிகளுக்கும் கட்டாயம் முன் தகுதியாக (Pre Requisite Qualification) இதை வைக்க முடியாது ஏன் ???

1. தமிழகத்தில் கணினி பாடமாகவும் அரசுத் துறைக்கும் வந்தே சொற்ப ஆண்டுகள் தான் ஆகிறது.(சுமார் 20 ஆண்டுகள்). பணிக்கு வரும்போதே படிச்சிட்டு வரனும் ன்னா சாத்தியமா ??? அப்ப Bill Gates மாறி ஆள் தான் Apply பண்ண முடியும்.

2. 2009 ஆம் ஆண்டு அரசானை படி  Typist/Steno Typist/Personal Clerks/PA/Personal Secretaries களுக்கே பணியில் சேர்ந்த பிறகு தான் COA கட்டாயமாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

3. இதை கட்டாயமாக முன் தகுதியாக வைத்தால் தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்க TNPSC அல்லோலபட வேண்டி இருக்கும்.

எனவே ஏற்கனவே இருக்கிறது தான் இது. ஒன்னும் புதுசு இல்ல. இனி மற்ற பணிகளுக்கும் பணியில் சேர்ந்த பிறகு COA  தேர்ச்சி செய்ய வேண்டும் என்று தான் முடிவுகள் வருமே அல்லது அதுவும் கூட வாத விவாதங்களுக்கு பிறகு Supervisory  பதவிகளுக்கு வேண்டாம் என்று கூட முடிவு எடுக்கலாம்.

எனவே COA லாம் என்னை பொறுத்த வரை முன் தகுதியாக (Pre Requisite Qualification) வைக்க மாட்டார்கள்.பணியில் சேர்ந்த பிறகு வேண்டுமானால் அதை கட்டாயம் ஆக்கலாம்.

குழம்பாமல் தேர்வுகளுக்கு படியுங்கள். அரை வேக்காட்டுதனமான செய்திகளை தவிருங்கள்.

Comments

Popular posts from this blog

சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகள் - தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு

history of CSTI Bhavanisagar

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

காலநிலை மாற்றம்

👉🏻வாரத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்...!!

சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது

கல்வி உதவித் தொகை

Bulk Promotional SMS

குற்றவியல் சட்டம்- முன் ஜாமீன்- கொடுமை