சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகள் - தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு
சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகள் - தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு
அளிக்க விதிகளை தளர்த்தல் - 53 வயதுக்கு குறையாதவர் மற்றும் 5 தடவைகள் முயற்சி
பணியாளர் (ம) நிர்வாக சீர்திருத்த (பணி எம்) துறை
அரசாணை (நிலை) எண். 1120 நாள் : 30.10.1984
படிக்க :
அரசாணை (நிலை ) எண். 1398 ,பொது (பணி-ஏ) நாள். 29.5.72.
ஆணை
மேலே படிக்கப்பட்ட அரசாணையில் சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து ஒரு அரசு
அலுவலருக்கு விலக்கு அளிக்க அவர் பொருட்டு விதிகளை தளர்த்த கீழ்க்கண்ட நிபந்தனைகள்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
(1) அரசு அலுவலர் 50 வயதுக்கும் குறையாதவராக இருக்க வேண்டும்.
(2) அவர் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது ஐந்து தடவைகள் முயற்சி செய்திருக்க வேண்டும்
(3) அவர் இந்த சலுகையை அடையத் தக்க அளவிற்கு அவருடைய பணிக்குறிப்புக்கள் திருப்தியாக இருக்க
வேண்டும்
2) மேற்கண்ட நிபந்தனைகளை மேலும் கடுமையானதாக்கலாமா அல்லது இன்னும் தளர்த்தலாமா என்பது
பற்றி அரசு கவனமாக ஆய்வு செய்தது. அதிக வயதானவர்கள் என்ற காரணத்திற்காக ஒட்டு மொத்தமாக
விதிவிலக்களித்தால் தம்மைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ள முயற்சி எடுக்கமாட்டார்கள். இதனால், பணிகளில் ஒரு
அளவிற்கு திறமை குறைவு ஏற்பட்டு விடும் என்பதால், ஒரு அரசு அலுவலர் குறைந்தது ஐந்து தடவைகளாவது தேர்வு
எழுதி முயற்சி எடுத்தாலன்றி விதி தளர்த்தலுக்கு அவருடைய நிகழ்வு கருதப்படவே கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்டத் தேர்வு எழுதி ஐந்து முறைகள் முயற்சி எடுத்துக் கொண்டார் என்பது பணிப்பதிவேட்டில் (Service Register) குறிப்புகள் இருக்க வேண்டும். அல்லது அவர் இது குறித்து நுழைவுச்சீட்டுகளை ( Hall Tickets ) வைத்து
அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த சலுகையினை அடைய 50 வயதுக்கு குறையாதவர்களாக
இருக்க வேண்டும் என்பது ஓய்வு பெறும் வயது 55 ஆக இருந்த போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும், இந்த விதிவிலக்கு
அளிக்க 50 வயது என்று நிர்ணயித்துள்ளதை 53 வயதாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலே குறிப்பிட்ட
முடிவுகளுக்கிணங்க மேலே படிக்கப்பட்ட ஆணைகளை மாற்றி கீழ்க்கண்ட ஆணையினை அரசு வெளியிடுகிறது .
சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் ஒரு அரசு அலுவலர் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க அவர்
பொருட்டு விதிகளை தளர்த்த கீழ்க்கண்ட நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்ய வேண்டும்.
1. சம்மந்தப்பட்ட அரசு அலுவலர் 53 வயதிற்குக் குறையாதவராக இருக்க வேண்டும்.
2. அவர் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது ஐந்து தடவைகளாவது முயற்சி செய்திருக்க வேண்டும்.
இதற்கு அத்தாட்சியாக பணிப்பதிவேட்டில் (ளுநசஎiஉந சுநபளைவநச) விபரம் இருக்க வேண்டும். அல்லது
இது குறித்து நுழைவுச்சீட்டுகளை (ழயடட கூiஉமநவள ) வைத்து சம்மந்தப்பட்ட அலுவலர் அனுப்ப வேண்டும்.
3. அவர் இந்த சலுகையை அடையத்தக்க அளவிற்கு அவருடைய பணிக்குறிப்புகள் மனநிறைவு
அளிப்பதாக இருக்க வேண்டும்.
3) மேலே பத்தி 2-ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளிலிருந்து விதிவிலக்கு
அளிக்க விதிகளை தளர்த்தக் கோரும் கோரிக்கைகளை பரிந்துரை செய்யும் போது கருத்திற்கொள்ளுமாறு அனைத்து
செயலகத் துறைகள் மற்றும் துறைத் தலைமைகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
கு. சொக்கலிங்கம்
அரசு தலைமைச் செயலாளர்
Comments
Post a Comment