சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது
சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது வி.சக்கரவர்த்தி … uவி.சக்கரவர்த்தி … வாதி /எதிர்/ 1. கிராம நிர்வாக அலுவலர்¸ திருவதிகை 2. தாசில்தார்¸ பண்ருட்டி 3. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்¸ கடலூர் 4. மாவட்ட ஆட்சியர்¸ கடலூர் மாவட்டம் 5. செயல் அலுவலர்¸ அருள்மிகு சரநாராயணபெருமாள் திருக்கோயில¸ திருவதிகை … பிரதிவாதிகள் வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்: 'இவ்வழக்கானது¸ வாதியானவர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரியும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக்கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது." '2. வழக்குரையின் சுருக்கம்: தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின